Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவிற்கு 3 புதிய விமான வழித்தடங்கள்: இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவிற்கு 3 புதிய விமான வழித்தடங்கள்: இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டம்

Share:

மலாக்கா அனைத்துலக விமான நிலையம் வாயிலாக இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய அனைத்துலக மற்றும் இரண்டு உள்நாட்டு விமான வழித்தடங்களைத் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் அப் ரவுப் யுசோக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மலாக்கா-பாதாம், மலாக்கா-கோத்தா பாரு மற்றும் மலாக்கா-பினாங்கு ஆகிய மூன்று வழித்தடங்களைத் தொடங்குவது குறித்து மலிவுவிலை விமான நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி காரணமாகப் பல விமான நிறுவனங்கள் மலாக்காவை ஒரு மையமாக மாற்ற ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

Related News