ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து வரும் திங்கள்கிழமை நடைபெறும் உச்சமன்றக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதன் தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து பெர்சத்து கட்சி நீக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, பாஸ் கட்சி, பெர்சத்து உடனான அரசியல் உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின், தங்களது கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலேயே நீடிக்கும் என்றும், ஒருதலைப்பட்சமாக தங்களை யாரும் நீக்க முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.








