தனது முன்னாள் கணவர் K.பத்மநாபன் என்ற முஹமாட் ரிடுவான் அப்துல்லா - வினால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகள் ப்ராஸ்மா டிக்சா - வை மீட்கும் விவகாரத்தில் அலட்சிம் காட்டியதாக போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக தனித்து வாழும் தாயாரான எம். இந்திராகாந்தி தொடுத்துள்ள வழக்கின் மேல்முறையீடு , அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
விசாரணை தேதியை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளர் நிர்ணயித்து இருப்பதாக இந்திராகாந்தியின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் ஐஜிபி சார்பில் கூட்டரசு மூத்த வழக்கறிஞர் மன்கிரஞிட் கோர் ஆஜராகியுள்ளார்.
ஐஜிபிக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு இந்திராகாந்தி செய்து கொண்ட வழக்கு மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈப்போ உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து இந்திரகாந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
மகள் பிரசன்னாவை மதம் மாறிய தனது முன்னாள் கணவன் கே. பத்மநாபன் என்று ரிதுவான் அப்துல்லாவிடமிருந்து மீட்குமாறு கடந்த 2014 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் துறை நிறைவேற்றவில்லை என்று கூறி, போலீஸ் படைக்கு எதிராக ஈப்போவைச் சேர்ந்த ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திரகாந்தி இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.








