Sep 27, 2026
Thisaigal NewsYouTube
காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை
தற்போதைய செய்திகள்

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

Share:

ஈப்போ, ஏப்ரல்.26-

ஈப்போவில் காவற்படை அதிகாரி ஒருவர் ஒரு நபரிடமிருந்து பணம் பெறுவது போன்ற 47 வினாடிகள் கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஈப்போ மாவட்டக் காவற்படை அது குறித்து துறை நிலையிலான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்த காணொலியில் காணப்படும் 'PK 56' என்ற அடையாளக் குறியீட்டைக் கொண்ட ரோந்து வாகனம் பேரா மாநிலக் காவல் துறைக்குச் சொந்தமானது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அடையாளம், சம்பவம் நடந்த இடம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என ஈப்போ காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் முஹமட் நஜிப் ஹம்ஸா தெரிவித்தார்.

காவற்படையின் நேர்மைத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய செயல்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஹமட் நஜிப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

Related News