காஜாங், செப்டம்பர்.14-
சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவிய காணொளி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்கி சுங்கச் சாவடி அருகே ஒருவர் தனது பெரோடூவா மைவி காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று, விபரீத சாகசத்தில் ஈடுபட்டது, அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த மர்ம நபரை காவற்படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, 25 வயதான அரசு ஊழியர் ஒருவர் காவற்படையிடம் சரணடைந்ததாக காஜாங் மாவட்டக் காவற்படையின் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.








