கோலாலம்பூர், அக்டோபர்.16-
வரும் அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் 25 பிரதான சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 25 சாலைகளில் மொத்தம் 6 நெடுஞ்சாலைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
Elite எனப்படும் North-South Expressway Central Link, NKVE எனப்படும் New Klang Valley Expressway, Guthrie Corridor Expressway, North-South Expressway, MEX Highway மற்றும் KL-Seremban Expressway ஆகியவை அந்த நெடுஞ்சாலைகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.