Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கும் பெண்ணுக்கும் சிறை
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கும் பெண்ணுக்கும் சிறை

Share:

விரைவுப் பேருந்தை ஓட்டியபோது பெண் ஒருவரைத் தனது மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்கும் அந்தப் பெண்ணுக்கும் மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்தது.

36 வயது பேருந்து ஓட்டுநரான அரிஃப் ஃபஹ்மி என்பவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், அவரது மடியில் அமர்ந்து பயணம் செய்த 21 வயது நூர் அடிலா நஜ்வா என்ற பெண்ணுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிப்பதாக மாஜிஸ்திரேட்மசனான் சினின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, பெம்பான் அருகில் அவ்விருவரும் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறைத் தண்னைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பேருந்து ஓட்டுநர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, பேருந்துப் பயணி ஒருவரை ஆபாசமாகத் திட்டியதற்காக நூர் அடிலாவிற்கு மேலும் 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்