Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூவர் மரணம், பத்து பேர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூவர் மரணம், பத்து பேர் படுகாயம்

லஹத் டத்து,அக்டோபர்

சபா, லஹத் டத்து, ஜாலான் ஃபெல்டா சஹாபத் Lahad- டில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு 4 wheel Drive வாகனம், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை
சம்பந்தப்பட்டு இருந்தன. இந்த விபத்து குறித்து மாலை 6.19 மணிக்கு ஓர் அவரச அழைப்பை தாங்கள் பெற்றதாக லஹத் டத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சும்சோ ரஷீத் கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், காரில் இருந்த ஒரு சிறுமி, ஒரு மாது ஆகியோர் இதில் உயிரிழந்தனர். பத்து பேர் காயமுற்றனர்.

வாகனத்தின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் நடடிக்கை இரவு 10.06 மணிக்கு முடிந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →