Sep 22, 2026
Thisaigal NewsYouTube
25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

Share:

பினாங்கு ஜெலுத்தோங்கில், கட்டுமானப் பணியில் இருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 25-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

லோரோங் பேராக்கில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

31 வயதான அந்தத் தொழிலாளி, 25-வது மாடியில் பலகைகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

அவர் 20-வது மாடியில் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 6.50 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் முகமது தெரிவித்தார்.

சம்பவ இடத்திலும் உடலிலும் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், குற்றச்செயலுக்கான எந்தத் தடயமும் கண்டறியப்படவில்லை.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், விசாரணைக்காக திடீர் மரணம் தொடர்பான வழக்கும் திறக்கப்பட்டுள்ளது.

Related News