கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
மலேசியாவில் சுமார் 1.96 மில்லியன் பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதிக்குக் குறைவான வேலைகளைச் செய்வதாக புள்ளி விவரத் துறை தெரிவிக்கின்றது. அதாவது, உயர்க்கல்வி பெற்றிருந்தும், பகுதி திறன் அல்லது குறைந்த திறன் கொண்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என அத்துறையின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலை வாய்புச் சந்தை தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 9.1 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 8.9 மில்லியன் வேலைகள் நிரப்பப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. நாட்டின் உற்பத்தித் திறனும் வளர்ந்துள்ள போதிலும், திறமைக்கேற்ற வேலை வாய்ப்பின்மை ஒரு பெரிய சவாலாக உள்ளது என முகமட் உஸிர் மஹிடின் கூறினார்.








