தெலுக் இந்தானில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
100 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழைமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு இவ்வாண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
மலேசிய திருநாட்டில் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆலயங்களில் ஒன்றாக இது விளங்குகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.
அதன் படி, நேற்று விடியற்காலை 4.30 மணி தொடங்கி ஆலய பால்குடம் எடுத்தல் வைபவம் நடைபெற்றது.
அதன் பின்னர், காலை 5.00 மணி தொடங்கி 7.00 மணி வரையில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெறறது.
பின்னர் காலை 7.30 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு மகா அபிஷேகம், நண்பகல் 12.01 மணிக்கு மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து, பிற்பகல் 1.00 மணிக்கு ஆலயத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனிடையே காலை 7.30 மணி தொடங்கி காவடிகள், பால்குடம் ஏந்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மீண்டும் மாலை 4.00 மணியளவில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
பேராக் மாநில உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்திருந்த ஏராளமான பக்தர்களுடன், பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் , துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி, ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா குறித்து அரவிந்த் அப்பளசாமி கூறுகையில், , நாட்டில் பிரசித்திப பெற்ற ஆலயமான தெலுக் இந்தான் தண்டாயுதபாணி ஆலயத்தில் கொண்டாடப்படும் சி்த்ரா பௌர்ணமி விழாவிற்கு மலேசியாவில மட்டும் அல்ல இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பக்தர்கள வருகை அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விழாவை ஆண்டு தோறும் சிறப்பான முறையில் வழி நடத்தி வரும் ஆலய நிர்வாகத்திற்கும் அர்விந்த் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த விழாவை ஆண்டு தோறும் சிறப்பான முறையில் வழி நடத்தி வரும் ஆலய நிர்வாகத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.











