May 24, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 27-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி, பாதாள சாக்கடையில் விழுந்து காணாமல் போன சம்பவம் தொடர்பில் கோலாலம்பூருக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அ மைச்சர் என்ற முறையில் தாம் களம் இறங்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்த போது, தாம் சரவாக், கூச்சிங்கில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும் கோலாலம்பூருக்கு திரும்பியப் பின்னர் கடந்த சனிக்கிழமை சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் நடப்பு நிலவரத்தையும் கேட்டறிந்ததாக தெரிவித்தார்.

அதேவேளையில் கோலாலம்பூர் டத்தோ பண்டார், டத்தோ டாக்டர் மைமுனா முகமட் ஷெரீப் - பையும் தாம் அடிக்கடி தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்து வந்ததாக டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News