May 16, 2026
Thisaigal NewsYouTube
வீட்டு வசதித் திட்டம்: புதிய " பில்ட் அண்ட் செல் " மாதிரி!
தற்போதைய செய்திகள்

வீட்டு வசதித் திட்டம்: புதிய " பில்ட் அண்ட் செல் " மாதிரி!

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.24-

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியாக, "பில்ட் அண்ட் செல்" என்ற மாதிரியைப் பின்பற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசு சலுகைகளை வழங்கவுள்ளது. எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கைவிடப்பட்டத் திட்டங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே இதன் நோக்கம் என வீட்டு வசதி ஊராட்சி மன்ற அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும், நகர்ப்புற புனரமைப்புச் சட்டப் பரிந்துரையை மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். இந்தத் திட்டம் பழைய வீடுகளைப் புதுப்பித்து, பாதுகாப்பான, மேம்பட்ட வாழ்க்கையை உறுதிச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related News