May 22, 2026
Thisaigal NewsYouTube
பழங்கால போர் வெடிக்குண்டு கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

பழங்கால போர் வெடிக்குண்டு கண்டுபிடிப்பு

Share:

பியூஃபோர்ட், ஜூன் 21-

இரண்டாம் உலகப் போரின் போது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வெடிகுண்டு ஒன்று சபா, பியூஃபோர்ட், கம்போங் பத்து 61 மான்டர்னியர் என்ற இடத்தில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

11 டன் எடையும், 105 மில்லிமீட்டர் நீளமும் கொண்ட Artillery Shell ரகத்தைச் சேர்ந்த அந்த பழங்கால வெடிகுண்டு, மண்ணில் செருகிக்கிடந்ததை அருகில் உள்ள கிராமவாசியான மாது ஒருவர் கண்டுபிடித்து , போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

நிலப்பகுதியை மண்வாரி இயந்திரத்தை கொண்டு தூய்மைப்படுத்தும் பணியின் போது அந்த வெடி குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பியூஃபோர்ட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் அப்துல்லா தெரிவித்தார்.

Related News