Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்

Share:

நீலாயில் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் ஒன்றில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பிணமாக கண்டறியப்பட்டார்.

நேற்று இரவு 11.21 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த அவசர அழைப்பின் படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரத்த வெள்ளத்தில் பிணமாகக் காணப்பட்டார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

தடயவியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் பல குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News