சபா மாநிலம், கெனிஙாவ் அருகே மனைவியுடனான தகராறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில், 56 வயதான தமது தாயை 31 வயது மகன் கொலை செய்ததாக நம்பப்படுகின்றது.
இது குறித்து கெனிஙாவ் மாவட்ட போலீஸ் தலைவர் எர்வான்ஷா அப்துல் பாசீர் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்போங் காதாகாயான் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் அப்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.








