Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

Share:

ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்லும் நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஈரான் அதிபர் மசூட் பெஸெஷ்கியானைச் சந்தித்த போது வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்கள் மற்றும் பதற்றம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி நடைபெற்ற இந்த நேரடி சந்திப்பில், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

மேலும், எரிசக்தி, விவசாயம், செம்பனை எண்ணெய், உணவுப் பாதுகாப்பு, ஹலால் தொழில் உள்ளிட்ட துறைகளில் மலேசியா-ஈரான் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மேலும், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

Related News