Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு
தற்போதைய செய்திகள்

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

Share:

நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 55 மலேசியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஸ்மார்ட் பேரிடர் மீட்புக் குழு, இன்று அல்லது நாளை நாடு திரும்பும் என வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை நேபாள அதிகாரிகள் நிறுத்தத் திட்டமிடவில்லை என்றும், காரணம் அங்கு சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை 11 ஸ்மார்ட் வீரர்கள், 12.4 டன் எடையுள்ள தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் நேபாளம் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், அந்த உபகரணங்கள் அனைத்தும் நேபாள மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் மாயமாகினர்.

அவர்களில் 55 மலேசியர்களின் நிலை குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News