Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மஇகாவின் விசாரணை தொடங்கியது
தற்போதைய செய்திகள்

மஇகாவின் விசாரணை தொடங்கியது

Share:

ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி கிள்ளான், லெட்சுமணா மண்டபத்தில நடைபெற்ற விடியலை நோக்கி நாம் எனும் அரசு சாரா இயக்கத்கூட்டத்தில் கலந்து கொண்ட மஇகா தலைவர்களுக்கு காரணம் கோரம் கடிதத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அனுப்பத்தொடங்கியது.

ஓம்ஸ் தியாகராஜனின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியவர்களின் ஒருவரான மஇகாவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் காஹாங் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவருமான எஸ். ரமேஷிற்கு கட்சியின் அமைப்புச் சட்டம் 14 ஆவது பிரிவை மேற்கோள்காட்டி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் எஸ். முருகவேல் இந்த காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

வரும் அக்டோபர் 19 ஆம் தேதி கட்சி தலைமையகத்தில் ஒழுங்கு நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ளும்படி ரமேஷிற்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News