ரயில் பாதைகளில் நடைபெறும் கேபிள் திருட்டுச் சம்பவங்கள், ரயில் சேவைகளில் பெரும் தாமதத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வருவதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பீ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் 44 கேபிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் ரயில் செயல்பாடுகளில் மொத்தம் 15,114 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருடப்படுவது வெறும் கேபிள் மட்டுமல்ல என்றும், ஒவ்வொரு கேபிள் திருட்டின் பின்னணியிலும் ரயில் அமைப்புகள் பாதிக்கப்படுவதுடன், பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாக கே.டி.எம்.பீ தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பயணிகளின் பயண நேரமும் பாதிக்கப்படுகிறது என்று கே.டி.எம்.பி. குறிப்பிட்டுள்ளது.








