Aug 24, 2026
Thisaigal NewsYouTube
தினத்துடன் இணைந்து பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் 27-ஆவது ஆண்டு விழா!
தற்போதைய செய்திகள்

தினத்துடன் இணைந்து பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் 27-ஆவது ஆண்டு விழா!

Share:

நாட்டின் பெருமைச் சின்னமாக விளங்கும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம், தேசிய தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து தனது 27-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை கே.எல்.சி.சி-யில் உள்ள பெட்ரோசெயின்ஸ் டிஸ்கவரி சென்டர் மற்றும் பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் ஸ்கை எக்ஸ்பீரியன்ஸ் மையங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தேசப்பற்று, பாரம்பரியம் மற்றும் அறிவியல்-தொழில்நுட்பக் கல்வியை இணைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடும்பத்தினரும் குழந்தைகளும் தேசப்பற்று கவிதை, பாரம்பரிய இசை மற்றும் நடனம், ஓவியம், கைவினைப் பயிற்சி மற்றும் ஸ்டெம் தொடர்பான செயல்பாடுகளில் பங்கேற்கலாம்.

மேலும், 86-ஆவது தளத்திலிருந்து பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம், மெர்டேக்கா 118 மற்றும் கோலாலம்பூர் கோபுரம் ஆகிய மூன்று முக்கிய அடையாளங்களையும் ஒரே புகைப்படத்தில் பதிவு செய்யும் சிறப்பு போட்டியும் நடைபெறுகிறது.

Related News