Aug 24, 2026
Thisaigal NewsYouTube
பட்ஜெட் 2027-ல் வீடு வாங்குவோருக்கு புதிய நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

பட்ஜெட் 2027-ல் வீடு வாங்குவோருக்கு புதிய நம்பிக்கை

Share:

2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வீட்டுடைமை பிரசாரத் திட்டமான ஏச்.ஓ.சீ- ஐ மீண்டும் அறிமுகப்படுத்துவது மற்றும் வாடகையிலிருந்து சொந்த வீடு என்ற அடிப்படையிலான ஆர்.டி.ஓ திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறுகையில், 350 தரப்பினரை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டு கலந்துரையாடலில் இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதுதவிர, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள், மறுசுழற்சியை அதிகரிப்பதற்கான ஊக்கத்தொகைகள், பசுமை நிதியுதவி மற்றும் பாதுகாப்பான நகரத் திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நிதி அமைச்சுடன் நடைபெறும் கலந்துரையாடலில், செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து மேலும் ஆராயப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

Related News