Oct 15, 2026
Thisaigal NewsYouTube

தங்களது நிறுவனத்திடம் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தங்களது நிறுவனத்திடம் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை

ஜன.3-

பாக்கிஸ்தானிலிருந்து வெளளை அரிசி இறக்குமதி செய்வது குறித்து தங்களது நிறுவனத்திடம் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று பெர்னாஸ் என்றழைக்கப்படும் Padiberas Nasional Berhad நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி செய்யலாம் என்று தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் Datuk Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal கருத்து தெரிவித்திருந்த நிலையில் பெர்னாஸ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. மலேசியாவில் அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும், இறக்குமதி செய்யப்படும் அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் பெர்னாஸ் மேலும் தெரிவித்துள்ளது.

சந்தையில் அரிசி விலையில் ஏற்படும் குழப்பத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்க, அரிசி இறக்குமதி குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று பெர்னாஸ் வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் சந்தையில் அரிசி விலையும் விநியோகம் தொடர்பான சிக்கலைத் தீர்க்கவும் பாகிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது ஒரு சிறந்த வழி என்று Datuk Syed Abu Hussin தெரிவித்திருந்தார். மேலும், இந்த யோசனை நாட்டின் ஒரே அரிசி இறக்குமதியாளரான பெர்னாஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

தாய்லாந்து, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளைப் போலவே பாகிஸ்தானும் பெர்னாஸின் முக்கிய அரிசி விநியோகிப்பாளர்களில் ஒன்று என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப, மலேசியாவிலும் போட்டி விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதை பெர்னாஸ் உறுதி செய்கிறது. அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை தனியார் ஆலைகளுக்கு விற்க முடியாத சூழ்நிலையில், அவர்களுக்கு ஒரு நல்ல சந்தையை பெர்னாஸ் உறுதி செய்கிறது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிலையான இருப்பு மேலாண்மை, போதுமான அரிசி கையிருப்பு போன்ற சமூக பொறுப்புகளை பெர்னாஸ் மேற்கொண்டு வருகிறது. இந்த கடமைகளின் மதிப்பு 3.2 பில்லியன் ரிங்கிட் ஆகும். மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் லாபத்தில் 30 விழுக்காடு விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அண்மையில் விவசாயிகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் 60 மில்லியன் ரிங்கிட் உதவியும் இதில் அடங்கும் என பெர்னாஸ் வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்