Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரு தொகுதிகளிலும் அமானா வெற்றி பெறும்
தற்போதைய செய்திகள்

இரு தொகுதிகளிலும் அமானா வெற்றி பெறும்

Share:

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமானா சாதனையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு நல்ல சூழல் தென்படுவதால் இது அமானாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும் என்று முகமட் சாபு தெரிவித்தார்.

Related News