Mar 13, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

திரைப்பட வெளியீடு மற்றும் இந்திய நாட்டு நடிகர், நடிகைகளை மலேசியாவிற்கு அழைத்து வந்த கலைநிகழ்ச்சிகளை படைப்பது போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரபல தொழில் அதிபர் டத்தோ மாலிக் தஸ்திகீர் இன்று புதன்கிழமை மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்ட டத்தோ மாலிக், புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட், மாலிக் மஜு சென்டிரியன் பெர்ஹாட் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான 42 வயது டத்தோ மாலிக், சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!