Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கார்டனியா நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

கார்டனியா நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

நாட்டின் முன்னணி ரொட்டி விநியோக நிறுவனமான கார்டெனியா, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து தனது 30 வகையான உற்பத்தி வகை உணவுப்பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்து இருப்பது தொடர்பில் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பொருட்களின் விலையை உயர்த்தி பொது மக்களை சிரமத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தங்கள் தரப்பு வலியுறுத்தி வரும் வேளையில் திடீரென்று கார்டேனியா நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது தொடர்பில் அது விளக்கம் அளிக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related News