Sep 27, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங் ஜெயாவில் மர்ம நபர்களால் ஆடவர் மிரட்டப்பட்டார் - பல வாகனங்கள் மீது கார் மோதியது
தற்போதைய செய்திகள்

அம்பாங் ஜெயாவில் மர்ம நபர்களால் ஆடவர் மிரட்டப்பட்டார் - பல வாகனங்கள் மீது கார் மோதியது

Share:

அம்பாங் ஜெயா தாமான் டாகாங் பெர்மாய் பகுதியில் நேற்று கார் ஒன்று பல வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆடவர், முன்னதாக தன்னை மூன்று நபர்கள் மிரட்டி தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் கூறுகையில், நேற்று காலை 7 மணியளவில் அந்த நபர் தனது தோழியை அவரது வீட்டில் இறக்கிவிடச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இருவரும் நீலாய் பகுதியில் உள்ள புக்கிட் மெலாத்தி மலைப்பகுதிக்கு நடைபயணம் செல்ல அந்தப் பெண்ணை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணை மீண்டும் அவரது குடியிருப்பில் இறக்கிவிட்டபோது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அந்த ஆடவரை அணுகி காரிலிருந்து இறங்குமாறு மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் அந்நபர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது மோதியதாகவும் கைருல் அனுவார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related News