Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கூலிம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்
தற்போதைய செய்திகள்

கூலிம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்

Share:

கெடா, கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தெஹ் லியான் ஓங், தேர்தலையொட்டி தாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் , கூலிம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை கைப்பற்றுமானால் மத்தியில் ஆட்சி செய்து வரும் ஒற்றுமை அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் இணைந்து இருக்கும் பட்சத்தில் அதிமான அனுகூலங்களை மக்கள் பெற முடியும் என்று தெஹ் லியான் ஓங் குறிப்பிட்டார்.

குறிப்பாக, உள்ளூர் பொருளாதார அறக்கட்டளையை வலுப்படுத்தி, அந்நிய முதலீட்டை அதிகரித்தால் கூலிம் வட்டார மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெஹ் லியான் ஓங் சுட்டிக்காட்டினார்.

கூலிம் வட்டாரத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அதேவேளையில் குலிம் ஜுன்ஜோங் என்ற இடத்தில் “பெலக் தோம்” என்ற டுரியான் மையமாக மாற்றி அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று தெஹ் லியான் ஓங் உறுதி அளித்தார்.

கூலிம் வட்டார மக்கள் டிஜிட்டல் கல்வியை பெறுவதற்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் மேம்படுத்தப்படும். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் விளையாட்டு மற்றும் பொழுதுப் போக்குக்குரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தவிர கூலிம் வட்டார சந்தைகளின் தரம் உயர்த்தப்படும் என்பதுடன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று தெஹ் லியான் ஓங் அறிவித்துள்ளார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்