கோலாலம்பூர், நவம்பர்.04-
மக்களவையில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான மசோதா வாக்களிப்பின் மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் மசோதாவிற்கு 120 எம்.பி.க்கள் ஆதரவாகவும் 67 எம்.பி.க்கள் எதிர்ப்பாகவும் வாக்ளித்துள்ள வேளையில், 35 எம்.பி.க்கள் அவையில் கலந்து கொள்ளவில்லை என்று மக்களவை சபா நாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் 419.2 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 2 பில்லியன் ரிங்கிட் குறைவாகும்.








