Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – ரஷ்யா வர்த்தகம்: ரிங்கிட், ரூபிள் நாணயங்களை பயன்படுத்தத் திட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசியா – ரஷ்யா வர்த்தகம்: ரிங்கிட், ரூபிள் நாணயங்களை பயன்படுத்தத் திட்டம்

Share:

மலேசியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்த, அமெரிக்க டாலருக்குப் பதிலாக ரிங்கிட் மற்றும் ரூபிள் ஆகிய உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.

ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற ஆசியான் தலைவர்களுக்கான மாநாட்டின் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இந்த முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

வர்த்தகம், முதலீடுகளை அதிகரிக்க இருநாட்டு நாணயங்களையும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொள்ள, மலேசியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிசக்தி வழங்க ரஷ்யா உறுதி அளித்துள்ளது என்று இந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

Related News