Feb 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை: ஆர்ஓஎஸ் தலைவர் ஸுல்ஃபிகார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை: ஆர்ஓஎஸ் தலைவர் ஸுல்ஃபிகார் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.20-

மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP- யில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் எந்தவோர் அதிகார துஷ்பிரயோகமும் நடக்கவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சங்கங்களின் பதிவு அலுவலகமாக ஆர்ஓஎஸ் தலைமை இயக்குநர் ஸுல்ஃபிகார் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

தமது அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

விசாரணைகள் மற்றும் ஆர்.ஓ.எஸ்-க்கு வழங்கப்பட்ட தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளானது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளை கட்சிக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும், கட்சி விவகாரங்களில் ஆர்.ஓ.எஸ் தலையிடாது என்றும் ஸுல்ஃபிகார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ். சந்திரசேகரன், தமது கட்சி சம்பந்தப்பட்ட முரண்பாடான கடிதங்களை வெளியிட்டதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஸுல்ஃபிகாருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

உல்ஃபிகார் "தன்னிச்சையான நிர்வாக முடிவுகளை" எடுத்ததாகவும் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமது கட்சியில் குற்றஞ்சாட்டப்பட்ட முறைகேடுகள் குறித்த விசாரணையில், ஆர்.ஓ.எஸ் - இன் முந்தைய கண்டறிதல்களுக்கு முரணாக ஸில்ஃபிகாரின் முடிவுகள் இருப்பதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சந்திரசேகரன் காட்டிய மேற்கோளின் படி, கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியிட்ட ஆர்.ஓ.எஸ் கடிதமானது தற்போதைய தலைமையால் கட்சியின் அரசியலமைப்பின் பல மீறல்களை உறுதிப்படுத்தியுள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கை நிதி திரட்டுவதற்குப் பயன்படுத்தத் தவறியது, உறுப்பினர்கள் அல்லாதவர்களை கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதித்தது மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை சட்டவிரோதமாகத் தள்ளுபடி செய்ததாகக் கூறப்படுவது ஆகிய குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கியுள்ளன.

இருப்பினும், கடந்த ஜனவரி 19 மற்றும் 23-ஆம் தேதியிட்ட ஆர்.ஓ.எஸ் கடிதங்களில் முந்தைய கண்டறிதல்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், முந்தைய பிரச்சினைகள், பதிவுச் செய்யப்பட்ட திருத்த நடவடிக்கைகள் இல்லாமல் தீர்க்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுவதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.ஓ.எஸ் -ன் சமீபத்திய கடித்தத்தில் அதிகார துஷ்பிரயோகம் அல்லது லஞ்சம், நிதி அல்லது வேறு விவகாரங்கள் உள்ளதா என்பதை விசாரிக்குமாறு சந்திரசேகரன், எஸ்பிஆர்எம்மை வலியுறுத்தியுள்ளார்.

Related News