Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இரசாயன நெடி வீச்சு, மூன்று தாமான்கள் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரசாயன நெடி வீச்சு, மூன்று தாமான்கள் பாதிப்பு

ஜொகூர்,செப்டம்பர் 03-

ஜோகூர்பாருவில் இன்று அதிகாலையில் மூன்று வீடமைப்புப்பகுதிகளில் ஏற்பட்ட இரசாயன துர்நாற்ற நெடியால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தமான் மவுண்ட் ஆஸ்டின், தமன் தயா மற்றும் தமான் இஸ்திமேவா ஆகிய மூன்று தாமான்களில் இராயன நெடி தொடர்பில் இன்று அதிகாலை 1.39 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக டெப்ராவ் தீயணைப்பு நிலைய செயலாக்க கோமாண்டர் கைருல் அஸ்ஹர் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

19 வீரர்களுடன் மீட்புப்பணிக்கான இரண்டு FRT இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த வீடமைப்புப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இராயன நெடி, எவ்வகையை சேர்ந்தது, அதன் ஆபத்துத்தன்மை முதலிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் நிலவி வரும் காற்றின் தன்மை குறித்து வாய்வுவை கண்டறியும் சாதனத்தின் மூலமாக சோதனை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →