ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.22-
பினாங்கு தீவின் தீமோர் லாவுட் மாவட்டத்தில் உள்ள மூன்று உணவகங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இடங்களிலும், சமையலறையிலும் எலிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், உணவகங்களின் மோசமான சுகாதார நிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1991-ஆம் ஆண்டு உணவு நிறுவனத் துணைச் சட்டத்தின் கீழ், இந்த மூன்று உணவகங்களுக்கும் 14 நாட்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது என பினாங்கு மாநகர் மன்ற பேச்சாளர் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உணவு நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








