May 21, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு மகத்தான வரவேற்பு
தற்போதைய செய்திகள்

அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு மகத்தான வரவேற்பு

Share:

இன்று சனிக்கிழமை காலையில் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் மகத்தான வரவேற்பை நல்கினர்.

தைப்பூசத்தையொட்டி போக்குவரத்து அமைச்சு வழங்கவிருக்கும் சலுகைகள் குறித்து அறிவிப்பதற்கு பத்துமலைத்திருத்தலத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு, தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

தைப்பூசத்தையொட்டி மலாயன் ரயில்வே பெர்ஹாட் இரண்டு நாள் இலவச ரயில் சேவை வழங்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டான்ஸ்ரீ நடராஜா , இச்சலுகையை அறிவித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு தேவஸ்தானம் சார்பில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News