Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆபாச விளையாட்டு உபகரணங்கள் அழிக்கப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆபாச விளையாட்டு உபகரணங்கள் அழிக்கப்பட்டன

செபரங் பேராய் ,அக்டோபர் 01-

சுமார் 13 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 27 ஆயிரத்து 35 ஆபாச விளையாட்டு உபகரணங்களை உள்துறை அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை முற்றாக அழித்தது.

இவ்வாண்டு மூன்று மாநிலங்களில் இந்த ஆபாச விளையாட்டு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு செயலகம் அறிவித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் OPS Cetak சோதனை நடவடிக்கையின் மூலம் வர்த்தகத் தளங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பொருட்கள் யாவும் சமூகத்தின் ஒழுக்கக்கேட்டிற்கும், கலாச்சார சீரழிவிற்கும் வித்திடக்கூடியவை என்பதால் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அவை அழிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →