Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஆயுதயேந்திய கொள்ளை... 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஆயுதயேந்திய கொள்ளை... 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

கோலாலம்பூர் ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது இளைஞரிடம், ஆயுதத்தைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அனாஸ் சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று ஆகஸ்ட் 1 அதிகாலை ஜாலான் மெட்ரோ புடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 22 முதல் 38 வயதுடைய 5 உள்ளூர் ஆடவர்களையும், 13 மற்றும் 19 வயதுடைய 2 இளம் பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் Jinjang மத்திய காவல் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவுகள் 395 மற்றும் 397-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி