பெர்கேசோவின் ஓப்ஸ் கெசான் 2.0 நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் இன்று அதிரடி சோதனைகள் தொடங்கியுள்ளன.
54 பெர்கேசோ அலுவலகங்களைச் சேர்ந்த சுமார் 300 அமலாக்க அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்று காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பின்னர் இதனைத் தெரிவித்த பெர்கேசோவின் செயல்பாட்டுப் பிரிவு துணைத் தலைமைச் செயல் அதிகாரி அஸிருவான் அரிஃபின், காலை 11.30 மணி நிலவரப்படி 159 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு விதிமீறல்கள் தொடர்பில் 14 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிபிடியில் பதிவு செய்துள்ள வியாபாரிகள், சுயதொழில் புரிவோர், குறிப்பாக இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்கிங் தொழிலாளர்களை இந்த நடவடிக்கை முக்கியமாகக் கண்காணிக்கிறது என்று அஸிருவான் அரிஃபின் விளக்கினார்.

இதனிடையே, ஜூலை முதல் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் 8,049 சோதனைகள் நடத்தப்பட்டு, 2,162 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அஸிருவான் தெரிவித்தார்.
மேலும், கிக் தொழிலாளர்களுக்கான பதிவு மற்றும் பங்களிப்பு தொடர்பான அமலாக்கம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.








