2027 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்தி இடம் பெறக்கூடும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதன் விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே இதனை அறிவிக்கட்டும் என்று கூறிய ரமணன், இந்தப் பட்ஜெட் நாட்டை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற திறன் பயிற்சி மையத்தின் 17-ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நல்ல செய்தி ஒன்று இருக்கிறது. பிரதமர் அதை அறிவிக்கட்டும்” என்றார்.
மேலும், “ஒரு குறிப்பு வேண்டுமா? சம்பள உயர்வு?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும், எந்தப் பிரிவினருக்கு, எவ்வளவு சம்பள உயர்வு என்பது குறித்து அவர் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
2027 பட்ஜெட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.








