May 21, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரின் துப்பாக்கிச் சூடால் வெங்கிக் கண்ணாடி உடைந்தது
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரின் துப்பாக்கிச் சூடால் வெங்கிக் கண்ணாடி உடைந்தது

Share:

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமான்சாரா, ஜாலான் PJU 5/14 இல் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியால் தற்செயலாக தரையை நோக்கி சுடப்பட்டது. அதனால், அந்த வங்கியின் நுழைவாசலில் உள்ள கண்ணாடி உடைந்தது.

இந்த விவகாரம் குறித்து காவல் துறை விசாரணை செய்து வரிவதாகவும் அந்தச் செயலால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்பட வில்லை எனவும் பெத்தாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் துணைத் தலைவர் Supt M ஹுசின் சொலெஹுடின் சொல்கிஃப்லி தெரிவித்தார்.

நேற்று காலை 10.13 மணி அளவில் அந்த வங்கியில் துப்பாக்கிச் சூது சத்தம் கேட்டதாக பொதுமக்களிடம் இருந்து தமக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்த வங்கியில் கொள்ளை அடிக்கும் முயற்சி ஏதும் நடக்கவில்லை எனவும் அவர் சொன்னார்.

Related News