இன்று காலை Loyalty தீவுகளின் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டர் அளவுக் கோலில் 6.0 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், காலை 9.15 மணியளவில் பிஜி, நாடியின் தென்மேற்கு பகுதியிலிருந்து 913 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 58 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட வேளையில், இரண்டாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் 894 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 93 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


