சிரம்பான், ஆகஸ்ட்.14-
மலேசியாவில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரோஹிங்யா அகதிகள் தற்காலிகமாகத் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
மின்மாரில் தொடர்ந்து நிலவி வரும் அமைதியின்மையைத் தொடந்து அந்த ஒன்றரை லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு மலேசியா புகலிடம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக ரீதியாக அமைக்கப்படும் ஓர் அரசாங்கத்தை அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் ஒன்றரை லட்சம் ரோஹிங்யா அகதிகளை அந்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப இயலாது என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.








