Sep 27, 2026
Thisaigal NewsYouTube
101.66 மில்லியன் மோசடி அழைப்புகளை தடுத்த எம்சிஎம்சி
தற்போதைய செய்திகள்

101.66 மில்லியன் மோசடி அழைப்புகளை தடுத்த எம்சிஎம்சி

Share:

நாட்டில் மோசடி மற்றும் போலி அடையாளத்துடன் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 101.66 மில்லியன் தொலைபேசி அழைப்புகளை கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து தடுத்துள்ளது.

இது குறித்து தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறுகையில், இந்த நடவடிக்கை ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான போலி அழைப்புத் தடுப்பு அமைப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள மோசடியாளர்கள், மலேசியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உள்ளூர் எண்களைப் போன்று தொலைபேசி எண்ணை காட்டும் மோசடி அமைப்பு முறையைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், 101.66 மில்லியன் போலி அழைப்புகள் தடுக்கப்பட்டிருப்பது, இந்தத் திட்டம் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருப்பதை காட்டுவதாகவும் தியோ நோ சிங் விளக்கமளித்துள்ளார்.

Related News

சிம்பாங் அம்பாட்டில் வருங்கால கணவர் சடலமாக மீட்பு - பெண் அதிர்ச்சி

சிம்பாங் அம்பாட்டில் வருங்கால கணவர் சடலமாக மீட்பு - பெண் அதிர்ச்சி

பேராக் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் மலாயன் புலி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேராக் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் மலாயன் புலி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு