Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது

ஷா ஆலாம், ஜன. 2-


புத்தாண்டு கொண்டாட்ட கலைவிழாவில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த நால்வர் மரணம் அடைந்த விவகாரத்தை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

சுபாங், பண்டார் சன்வேயில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணம் அடைந்த இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆகியோரின் சடலங்கள், பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.

நால்வரின் இறப்பு, இதுவரையில் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →