கோத்தா திங்கி, நவம்பர்.21-
லோரி ஒன்று சாலையை விட்டு விலகி பாதாளத்தில் விழுந்து, தீப்பிடித்துக் கொண்ட சம்பவத்தில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.35 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, ஜாலான் லோக் ஹெங் – மாவாய் சாலையின் 26 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் வோல்வோ ரக லோரியைச் செலுத்திய 38 வயது ஓட்டுநர் உயிரிழந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் வேறு வாகனம் ஏதும் சம்பந்தப்படவில்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








