Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் கவர்னர்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் கவர்னர்

Share:

நாட்டில் திவால் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வங்கிளுக்கான ஓபீஆர் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதே காரணமாகும் என்று கூறப்படுவதை மத்தியப் பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா கவர்னர், டான்ஶ்ரீ நூர் ஷம்சீயா முகமட் யூனோஸ் மறுத்துள்ளார்.

இப்படி ஒரு வாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எந்தவொரு புள்ளிவிவரமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று நூர் ஷம்சீயா விளக்கினார்.

வங்கிகள் விதித்து வரும் ஓபீஆர் வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா அடிக்கடி உயர்த்தி வருவதன் விளைவாக, தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் திவாலாகி வருவதாக கூறப்படுவது தொடர்பில், நூர் ஷம்சீயா எதிர்வினையாற்றினார்.

Related News