உக்ரெயின் வான் போக்குவரத்துப் பாதையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்து இன்று ஜுலை 17 ஆம் தேதியுடன் சரியாக 9 ஆண்டுகள் பூர்த்தியாகிறது என்ற போதிலும் 298 பேரை பலிகொண்ட அநத் கோர சம்பவம் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படும் வரையில் மலேசியா தொடர்ந்து போராடும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுலை 17 ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் எம்சஸ்டெர்டம்மிலிருந்து 298 பேருடன் கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட பேரிடர் தொடர்பிலான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி நெதர்லாந்து தெ ஹெகியுவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இருந்த போதிலும் உயிரிழந்த 298 பேருக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் நீதி கிடைப்பதற்காக உண்மையை வெளிகொணர்வதில் இவ்விவகாரத்தை மலேசியா தொடர்ந்து முன்னெடுக்கும் என்று போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், இவ்விவகாரத்தில் முரண்பாடு கொண்டுள்ள தரப்பினருக்கு இடையிலான வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக எம்எச்17 மீதான விசாரணையை தொடர்வதற்கு அனைத்துலக வான் போக்குவரத்து அமைப்பு முடிவு எடுத்திருப்பதையும் மலேசியா சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


