Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கடற்கரையோரத்தில் ஆடவர் சடலம் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடற்கரையோரத்தில் ஆடவர் சடலம் மீட்பு

கோலசிலாங்கூர், நவ. 28-


கோலசிலாங்கூர் அருகில் தஞ்சோங் காராங், சுங்கை பூரோங், கம்போங் பாரிட் 4 இல் உள்ள கடற்கரையோரத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது-

இச்சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.16 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.

அந்த ஆடவரிடம் எந்தவொரு அடையாளப் பத்திரமும் காணப்படவில்லை. திடீர் மரணம் என்று அந்த ஆடவரின் இறப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் சடலம், தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →