பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.01-
வாகனம் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சௌஜானா புத்ரா, சௌவுத் கிளாங் வெல்லே எக்ஸ்பிரஸ்வே விரைவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
நால்வரில் ஒருவர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மூவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.








