கோலாலம்பூர், செப்டம்பர்.25-
போதைப் பொருளைக் கொண்டுச் சென்று ஒப்படைக்கும் கைக்கூலிகளாகச் செயல்படுகின்ற சாமானியர்களைத் தூக்கிலிடுவது மூலம் போதைப் பொருள் கும்பல்களைத் துடைத்தொழித்து விட முடியாது. மாறாக, கடத்தல் கும்பல்கள் மேலும் நெஞ்சுரம் பெறவே இது வழிவகுக்கும் என்று நீதி சீர்திருத்தக் குழுவான ஹயாட் கூறுகிறது.
போதைப் பொருள் கைக்கூலிகளைத் தூக்கிலிடுவது மூலம் , போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னணியில் செயல்படுகின்ற சாத்தியமான நபர்களை திறம்பட அகற்றி விடும் என்று ஹயாட் கூறுகிறது.
சாமானியர்களுக்கு விதிக்கப்படும் தூக்குத் தண்டனை, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை அசர வைத்து விடாது. மாறாக, அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடரவே வழிவகுக்கும் என்று அந்தக் குழு கூறுகிறது.
சிங்கப்பூரில் இன்று மதியம், 39 வயதான மலேசியப் பிரஜையான கே. தட்சிணாமூர்த்திக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஹயாட் எதிர்வினையாற்றியது.








