வீடொன்று தீப்பிடித்துக்கொண்டதில் தப்பிக்க முற்பட்ட இரண்டு சகோதரர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் ஜோகூர், பெங்கெராங், தாமான் பாயு டாமாயில் நிகழ்ந்தது. ஒருவர் 90 விழுக்காடு தீயக்காயங்களுடனும் மற்றொருவர் 30 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிர் தப்பியதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.
50 மற்றும் 70 வயதுடைய அந்த இரு சகோதர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் தீ ஏற்பட்டதற்கான காரணங்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். முன்னதாக, அந்த இரு சகோதர்களுக்கும் சுங்காய் ரெங்கிட் சுகாதார கிளினிக்கில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


